இத்தாலியில் “இல் போக்லியோ” நாளிதழ் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் இத்தாலியில் இருந்து வெளியாகும் இல் போக்லியோ, நாளிதழ் நிறுவனம் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்து.
இந்த 4 பக்க நாளிதழில் தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்தியை சொன்னால் மட்டும் போதும், மற்றதையெல்லாம் அது பார்த்துக் கொள்ளும் என்றும் நாளிதழின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.