சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது.
2004 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற இந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் 2 இலட்சத்து 28 ஆயிரம் உயிரிழந்துள்ளதுடன், இலங்கையில் 35 ஆயிரம் பேர்வரையில் உயிரிழந்திருந்தனா்.
அதற்கமைய, ஒவ்வொரு வருடமும் டிசம்பா் மாதம் 26ஆம் திகதி சுனாமி தினமாக அறிவிக்கப்பட்டு, சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் நிகழவுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர்ந்து இன்று காலை 9.25 மணியிலிருந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கோரியுள்ளது. .