18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்று(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru) அணிகள் மோதுகின்றன.
இதேவேளை, நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் வர்ணனை செய்ய உள்ளார்
இதன்மூலம் கிரிக்கெட்டில் முதல் முறையாக வர்ணனையாளராக கேன் வில்லியம்சன் அறிமுகமாகிறார்