2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வரவு செலவுத் திட்டத்துக்காக கட்சியின் வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றபோது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் பதிவாகின.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் அரசாங்கம் 114 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எடுத்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“இது அரசாங்கத்தின் பட்ஜெட். மக்கள் அவர்களை ஆட்சியில் அமர்த்தினார்கள். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். நானும் நம் நாட்டு மக்களின் கருத்து மற்றும் விருப்பத்துடன் செயல்படுகிறேன். அதனால்தான் ஆதரவாக வாக்களித்தேன்.”
“மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அரசு செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவதை விட, மக்களுக்கு நமது ஆதரவை வழங்குவது நல்லது.”