பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படுமாயின், பொலிஸ் உத்தியோகத்தர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் இராஜினாமா செய்ய முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விழாவொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றம் கோரியுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பான மேலதிக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு பதிலாக ஒரு அதிகாரியை நியமிக்கும் வரை, அவரால் வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விடுபட முடியாது.
இதன்படி, இது தொடர்பான விடயங்கள் முடிவடைந்து உயர் அதிகாரிகள் இது தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கும் வரை அவர் தனது பதவியில் கடமையாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் சமர்ப்பித்த கோரிக்கையின்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பிற நிறுவனங்களால் வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்படும் வரை தனக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன் என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் அதற்கான அதிகாரியொருவர் நியமிக்கப்படும் வரை ஊடகப் பேச்சாளர் என்ற ரீதியில் தாம் கடமையாற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.