இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தின் பாங்காக்கில் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் 6ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த விஜயத்திற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர், வணிகவரித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
2030ஆம் ஆண்டுக்குள் ‘PRO BIMSTEC’ எனப்படும் வளமான பகுதியை அடைவதே இதன் நோக்கமாகும்.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 07 உறுப்பு நாடுகளுடன் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையில் பிராந்திய ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.