சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
41 வயதான அவர் இந்தப் பதவிக்கு தெரிவாகும் முதல் பெண்மணி மற்றும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார்.
ஆறு ஆண் வேட்பாளர்களை வீழ்த்தி அவர் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக தெரிவானார்.
97 வாக்குகளில் 49 வாக்குகளை கிறிஸ்டி கோவென்ட்ரி பெற்றுக் கொண்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.