காஸாவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பொருட்படுத்தாமல், காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை கண்டிப்பதாகவும் சவூதி அரேபியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் நேரடியாக நடத்தப்படுகின்ற ஷெல் தாக்குதல்களையும் கண்டிப்பதாக சவூதி அரேபியா வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.