follow the truth

follow the truth

March, 20, 2025
Homeஉலகம்ரஷ்யா ஒரு மாத போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

ரஷ்யா ஒரு மாத போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

Published on

ரஷ்யா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் நடத்திய பேச்சில், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மூன்றாண்டுகளை கடந்தும் நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில், அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

அது தொடர்பாக சில முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், இரண்டாம் கட்டமாக இரு நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான தொலைபேசி பேச்சுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன், டிரம்ப் நேற்று பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் நடந்த இருவரின் பேச்சு குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர்.

‘இதன்முடிவில், அந்நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக, உக்ரைனும் ரஷ்யாவும் இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் அமுலாகும் என்று கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மற்றொரு கோர விமான விபத்து – 12 பேர் பலி

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர்...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். 2024 ஜூன் 5 ஆம்...

இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான மிலேச்ச தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார...