மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி (Electronic Tree-Wheeler – E-Tuk) அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் இன்று(18) ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் முதலில் வாதுவ பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச் சக்கர வண்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கும். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணமும் வழங்கப்படும்.
பின்னர் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மீள்சுழற்சிக்கு அனுப்பப்படும். இதன் தொடக்க விழா இன்று (18) பத்தரமுல்ல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.