இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான மிலேச்ச தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கின்ற பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனித ரமழான் மாதத்தின் இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்தவர்கள் மத்தியில் அதிகமான குழந்தைகள் இருப்பதாக சுகாதார பிரிவு கூறுகிறது.
இஸ்ரேலின் இந்த மிருகத்தனமான செயலுக்கு உலகின் பல நாடுகள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.
குறித்த தாக்குதலுக்கு இலக்கான 05 பிள்ளைகளின் தாயான ராபிதா “நரகத்தில் உள்ள இரவு போன்று உள்ளது. யுத்தம் ஆரம்பமான முதல் நாள் போன்று இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“விமான சப்தங்கள் கேட்டு நாங்கள் திடுக்கிட்டு எழுந்தோம், எங்கள் கடிகாரம் இரவு 2.10 என்று காட்டியது. என் மகளும் பாபா, மாமா என்று எழுந்தார். ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறினோம்” என்று இன்னுமொரு தாய் கருத்து வெளியிட்டுள்ளார்.