போதைப்பொருள் சுற்றவளைப்பு நடவடிக்கையின் போது கான்ஸ்டபிள் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் வெலே சுதா” எனப்படும் சமந்த குமாரவின் சகோதரர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (17) இராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் தோள்பட்டை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக கான்ஸ்டபிள் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.