முன்னதாக திட்டமிட்டவாறு நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்ததே இதற்குக் காரணமென தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய அதன் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.