follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP1பாராளுமன்ற சந்தியில் ஐந்து நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை

பாராளுமன்ற சந்தியில் ஐந்து நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை

Published on

இன்று (17) முதல் 21 ஆம் திகதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்றம் அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த தரப்பினர் மேற்படி குறிப்பிட்டுள்ள நாட்களில் வெலிக்கடை, பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி செய்யப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான இல. 04 நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் தம்மிக்க முனசிங்க,

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தென் மாகாண தலைவர் ரசிக பிரசாத்,

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மத்திய மாகாண தலைவர் சுமித் ரத்னாயக்க,

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மேல்மகாகாண செயற்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.எல்.ரங்வல

உள்ளிட்ட ஏனைய பங்கேற்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகத்தின் போது, ​​பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் வீதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் எந்தவொரு வீதிகளையும் மறிக்கவோ, போராட்டம் நடத்தவோ அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் மற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும், எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதை அனைத்து பிரதிவாதிகளும் ஆதரவாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம்...

ஜனாதிபதி – சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு...