பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் மாலைதீவுக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கான சகல செயற்பாடுகளும் வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றதாக ஞாயிறு திவயின செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.