படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை
பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.
1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்து ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஜே.வி.பி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை விதைக்க நடவடிக்கை எடுத்தது.
அந்த நேரத்தில், நாட்டின் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரம் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவால் அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மகாவலியிலிருந்து கொழும்புக்கு மின்சாரம் வழங்கும் மையம் மற்றும் வணிக வலயம் போன்ற பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தன.
“அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவம் வரவழைக்கப்பட்டது.”
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை வருமாறு;