follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP2அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல்

அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல்

Published on

சர்வதேச ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி குறித்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முதலிடத்தில் உள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிக வருமானத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வருடாந்த வருமானம் இந்திய மதிப்பில் 18,760 கோடி என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

வருடமொன்றிற்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா 79 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை 59 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வருமானமாக ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்காம் இடத்திலும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஐந்தாவது இடத்திலும் உள்ளதுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் 8 ஆவது இடத்தில் உள்ளது.

இதில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மற்றும் நியுசிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக...

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல்...

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...