அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சிரிதத் தம்மிக்க என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.