காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா மஹர சிறைச்சாலையின் வைத்தியசாலை வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அதே வைத்தியசாலை வார்டில் மேர்வின் சில்வாவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் அவருக்கு ,மேலதிக வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.