உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 17ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (12) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி, தபால் மூலம் ஏற்படக்கூடிய தாமதங்கள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 17ம் திகதி நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், மார்ச் 13 முதல் 17ம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை, சான்றிதழ் வழங்கும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.