follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

Published on

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமது வாழ்த்து செய்தியில் , சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் போதனையாகும்.

சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின் மூலம் தவறான புரிதல் நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கை நெறிக்கு இந்தப் போதனைகள் வழிகாட்டுகின்றன.

கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக இந்த வருட நத்தார் பண்டிகையை, சுகாதாரப் பரிந்துரைகளுக்கு ஏற்ப கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு வருட காலமாக, தனிப்பட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு நாடு என்ற வகையில் ஒவ்வொருவரினதும் மதங்களினால் போதிக்கப்பட்ட ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் ஒழுக்கம் என்பன தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500...

அரச நிதியில் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்திய கெஹெலியவின் வழக்கு ஒத்திவைப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணமாக 240,000 ரூபாயை அரச அச்சக...