இங்கிலாந்தில் ஒரு இலட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானத்திற்கான திட்டங்களை மான்செஸ்டர் யுனைடெட் கிளப் வெளியிட்டுள்ளது.
இது இங்கிலாந்தில் ஏற்கனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை விஞ்சும் அளவில் அமைக்கப்படவுள்ளது.
அமைக்கப்படவுள்ள புதிய மைதானம் உலகின் மிகச்சிறந்த கால்பந்து மைதானமாக இருக்கும் என்று மைதானத்தின் இணை உரிமையாளர் ஜிம் ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.
இந்த மைதான கட்டுமானத்துக்கு மொத்தமாக 2 பில்லியன் யூரோ வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மைதான கட்டுமான பணியில் சுமார் 92,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.