follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉலகம்ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்கள் பறிமுதல்

ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்கள் பறிமுதல்

Published on

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்களாதேஷில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷேக் ஹசீனா மீதான ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் இல்லமான சுதாசதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

தாய்லாந்து - மியன்மாரில் இணையத்தள மோசடியில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி...

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை சுமார் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம்...

உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்

2024 உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த...