மார்ச் 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் நடத்தும் நோக்கில் கமத்தொழில் அமைச்சின் வளாகத்தில் ஒரு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.
கால்நடை கணக்கெடுப்பின் போது ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்கள் குறித்து விசாரிக்க இந்த செயல்பாட்டு அறை நேற்று (11) முதல் 15 ஆம் திகதி வரை செயல்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏதேனும் சிக்கல் இருப்பின், செயல்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணான 011-2034336 ஐ அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.