பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை (13) காலை 8 மணி வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத் சுகததாச இதனைத் தெரிவித்தார்.