follow the truth

follow the truth

March, 12, 2025
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி நிறைவு விழா மேடையில் பாகிஸ்தான் புறக்கணிப்பு

சாம்பியன்ஸ் டிராபி நிறைவு விழா மேடையில் பாகிஸ்தான் புறக்கணிப்பு

Published on

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு “விதிமுறைகள்” தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு தெரிவித்து இருக்கிறோம்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முறைப்பாட்டுக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. “பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்,” என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு

2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL)...

கெப்டன் பும்ரா இல்லை – ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று...

2025 சாம்பியன்ஸ் டிராபியை 3வது முறையாக வென்றது இந்தியா

ICC சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை 3வது முறையாக வென்றது இந்திய அணி. துபாயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில்...