சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன், மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு – தலைப்புக்கள் 118, 281, 282, 285 முதல் 289 வரையும் தலைப்புக்கள் 292 மற்றும் 327
பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கி மார்ச் 21 ஆம் திகதி வரை 19 நாட்கள் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.