follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP2தேசபந்து வேட்டையில் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் சோதனை

தேசபந்து வேட்டையில் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் சோதனை

Published on

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்க பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று(11) சோதனை நடத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க, குறித்த வீட்டைப் பரிசோதிக்க தம்மிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்குத் தாம் அனுமதி வழங்கியதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

முன்னாள் பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்யுமாறு அறிவித்து அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(11) திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டது.

எனினும் அவர் இதுவரையில் தொடர்ந்து தேடப்படுவதுடன் தமது கைது நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தி நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிசாருக்கு LGBTQ குறித்த பாடநெறி..

நெதர்லாந்தின் உதவியுடன், ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் குறித்து உள்ளூர் பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கல்வி கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கட்டான தேசிய...

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் தொடர்பில்...

ஹிருணிகா – ஹிரான் திருமண பந்தம் முடிவுக்கு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. தனது கணவரான பிரபல கலைஞர்...