உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குத் தகுதி பெற்றவர்களுக்கு மேலதிகமாக, இந்தப் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கு 172,96,330 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.