கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று(11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
– பொலிஸ் தலைமையகம் – 0112421111
– பொலிஸ் அவசர இலக்கம் – 119
– இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் – 1911
– பாடசாலைப் பரீட்சை ஏற்பாடு மற்றும் பெறுபேறுகள் கிளை
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் – 0112784208/ 0112784537
இம்முறை, சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.