follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP1அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும்  சமூகத்தை உருவாக்குவதே அரசின் எதிர்பார்ப்பு 

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும்  சமூகத்தை உருவாக்குவதே அரசின் எதிர்பார்ப்பு 

Published on

அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும்  வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பாதுகாப்பிற்காக அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இதன்போது கலந்துரைாடப்பட்டன.

பொருளாதார ரீதியாக வலுவூட்டல் தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன்,  இதற்காக சமுர்த்தி நிதியிலிருந்து 55 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதுடன், சர்வதேச தரங்களை கருத்திற்கொண்டு பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காத நபர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்குத் தேவையான  சட்ட மற்றும் நிறுவன வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு...

பிரதமர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம்...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,...