follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅன்பைப் பகிர்வோம்! நத்தார் பண்டிகையை முன்னிட்டு 11 கைதிகளுக்கு சிறையில் இருந்து விடுதலை

அன்பைப் பகிர்வோம்! நத்தார் பண்டிகையை முன்னிட்டு 11 கைதிகளுக்கு சிறையில் இருந்து விடுதலை

Published on

சிறுதொகை அபராதத்தை செலுத்த முடியாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேருக்கு பொதுநலன் கருதி விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

டெய்லி சிலோன் மற்றும் NEXTV ஆகிய டிஜிட்டல் செய்தித் தளங்களின் அனுசரணையுடன் Project Hope  (நம்பிக்கைத் திட்டம்) என்ற நற்பணியை மாலன் டேல் ஃபெரிரா இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

மிகச் சிறிய குற்றச் செயல்களுக்கான மிகக் குறைந்த அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களின் அபராதத் தொகையை செலுத்தி இந்தக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 9 ஆண்கள் 2 பெண்கள் என மொத்தம் 11 பேர் மொத்தமாக 45 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்தி விடுவிக்கப்பட்டனர். 5 ஆயிரம் ரூபா அபாராதம் செலுத்த முடியாத இந்தக் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்ததுடன், இவர்களுக்கான செலவுகளை மக்கள் நிதியில் இயங்கும் அரசாங்கமே செலவிட்டு வந்தது.

சிறையில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நாளாந்தம் 600 ரூபா விகிதம் 11 பேருக்கு நாளாந்தம் 6600 ரூபா செலவிடுகிறது. ஆறுமாதங்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபா வரை செலவிட்டுள்ளது. தற்போது 45,000 ரூபா அபராதத்தை வழங்கி இவர்களுக்கான விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை என்பது மனிதர்களை சீர்த்திருத்தவே உதவும் என்ற அடிப்படையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு டெய்லி சிலோன், நேஒவவுஎ நிறுவனங்கள் முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் ராஜபக்சவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...