follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP2பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

Published on

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே (Rodrigo Duterte), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டார்.

இவர் ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்தது.

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார், 2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை, டுட்டெர்டே டாவோ நகர மேயராக இருந்த 2011 முதல், பிலிப்பைன்ஸ் 2019 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகும் வரை நடந்த குற்றங்களை உள்ளடக்கியது.

கைதுக்கு முன், ஹொங்கொங்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டுட்டெர்டே, “இது என் விதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்டால், அதை எதிர்க்க முடியாது” என்று கூறியிருந்தார்.

அவரது கைது, பிலிப்பைன்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடையே நீதி கிடைத்ததாக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

O/L பரீட்சை – விதிமுறைகளை மீறினால் முறைப்பாடுகளை முன்வைக்கவும்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று(11) நள்ளிரவு முதல் தடை...

உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்

2024 உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த...

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளுக்கு

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை...