தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
டேஸ்ட்-தி-டிவி (Taste-the-TV) என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது ஹைஜீன் ஃபிளிம்
என்றழைக்கப்படும் ஒரு வித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்பட்டு, அதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும்.
இந்த ரக தொலைக்காட்சிகளைக் கொண்டு, சமையல் கலைஞர்களை அல்லது வொயின் நிபுணர்களை தொலை தூரத்தில் இருந்து கொண்டு பயிற்றுவிக்கலாம் என ஜப்பான் நாட்டின் மேஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியஷிடா தெரிவித்துள்ளார்
இந்த தொலைக்காட்சிகளை வணிக ரீதியில் தயாரிக்கத் தொடங்கினால் ஒரு டிவியை தயாரிக்க 875 அமெரிக்க டாலர் ஆகும் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.
“வீட்டில் இருந்தபடியே உலகின் மறுமுனையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தைச் சாத்தியப்படுத்துவது தான் இந்த தொழில்நுட்பத்தின் இலக்கு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்