follow the truth

follow the truth

March, 10, 2025
HomeTOP1கைதை தடுக்க கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

கைதை தடுக்க கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

Published on

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15வது ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், E-சிகரெட்டுகளைப்...

இஷாரா இந்தியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை

கொழும்பு புதுக்கடை எண் 5 நீதிமன்றத்தில் உள்ள சிறையில் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல...

சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு

இந்த நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக...