எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக தேசிய மக்கள் கட்சி விரே கெலி பல்தராஸ் (Vraie Cally Balthazar) நியமிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் இருபத்தைந்து வீத பெண் பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த தேர்தலில் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.