யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையே நாளாந்த நேரடி விமான சேவையை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமான சேவைகளுக்கான அதிக கேள்வியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.