follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுவெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்வது தொடர்பிலான கட்டுப்பாடு!

வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்வது தொடர்பிலான கட்டுப்பாடு!

Published on

வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்யும் நடவடிக்கைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்திருக்கின்றது.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களை ஓர் இலங்கைப் பிரஜை பதிவுத் திருமணம் செய்வது தொடர்பாகவே இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 2022.01.01 முதல் வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உடைய ஒருவர்  இலங்கைப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்வதாயின் தாம் வதியும் நாட்டிலிருந்து தாம் குற்றச் சம்பவம் எதனுடனும் தொடர்புள்ளவர் அல்லர் என அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து உரிய சான்றிதழ் பெற்று வந்து அதனை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து இலங்கைப் பதிவாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறவேண்டும்.

இதேபோன்று சுகாதார நிலை பற்றிய ஒரு சுய பிரதிக்ஞனையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தாலும் சாதாரண விவாக பதிவாளர்கள் (கிராம பதிவாளர்கள்) மூலம் பதிவு செய்ய முடியாது.

பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன?

தற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவிற்கு இடமாற்றம்...

எல்பிட்டிய தபால் மூல வாக்குகள் 14ஆம் திகதி

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள்...

நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி...