நாளை (01)முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் திங்கள் முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளைமறு தினம் (02) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது