follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஉண்மையைப் பேசியதால் பதவி பறிபோனதா? விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் புலம்பல் (VIDEO)

உண்மையைப் பேசியதால் பதவி பறிபோனதா? விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் புலம்பல் (VIDEO)

Published on

தனது நேரத்தையும், உழைப்பையும், அறிவையும் அர்ப்பணித்த பின்னரும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஏமாற்றம் அளிப்பதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் உதித் கே ஜயசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தான் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து தனக்கு தெரியாது என்றும், இந்த நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியின் காரணமாக உடனடி உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அவர் விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவரது கருத்துக்கள் தான் அவரை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்ததா என வினவியபோது, ​​தற்போதுள்ள நிலைமையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்த அறிக்கை சர்ச்சைக்குரியது என்றும் , அறிவியல் எச்சரிக்கை மற்றும் முன்யோசனையுடன் செயல்பட்டால் நாடு உணவு நெருக்கடியை சமாளிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறை குறித்து பேசுவது அரசின் கொள்கையை மீறும் செயல் அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், இரசாயனத்திலிருந்து கரிம உரத்திற்கு மாறுவது 100 வீதம் சாத்தியமில்லை என்றும் திரு.ஜெயசிங்க குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை...

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல்...

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஆரம்பம்

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு...