திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது.
குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை உள்ளடங்கலாக ஆரம்பக் கருத்திட்ட நடவடிக்கைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவையில் இது தொடர்பாக வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கக்கட்டுள்ளது.
இலங்கை அரசு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை இந்திய எண்ணெய் கம்பனி மற்றும் திருகோணமலை பெற்றோலிய முனைய கம்பனி ஆகியன சீனன்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பிரதேசத்தின் உரித்து, அபிவிருத்தி மற்றும் பயன்பாடுக்கான ஒப்பந்தத்தில் 2022.01.06 அன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை புகையிரதத் திணைக்களம், சமுத்திரச் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட ஏற்புடைய தரப்பினர்களின் அனுமதிகளும் தற்போது பெறப்பட்டுள்ளன.
திறைசேரிக்கு செலவுச்சுமை ஏற்படாத வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.a