மித்தெனிய முக்கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மித்தெனிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 36 வயதுடைய
ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர்களுக்கு T-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 12 தோட்டாக்களை வழங்கியதாக முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த முக்கொலை தொடர்பில் மித்தெனிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.