ஹட்டன் ஷெனன் தோட்ட தொகுதியில் உள்ள வீடுகளில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் கடுமையாகப் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.