2025 ஜனவரி மாதத்தில் நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலுக்கு 400.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முடிந்ததாக இலங்கை மத்திய வங்கி தமது புதிய புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது.
இது 2024 ஜனவரி மாதத்தில் 341.8 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தைப் பெற்றதுடன் ஒப்பீட்டளவில் 17.2% அதிகரிப்பாகும்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டதற்கு அமைவாக 2025 பெப்ரவரி 1 இலிருந்து 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 232,341 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.