follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் திணிக்க முயற்சி

கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் திணிக்க முயற்சி

Published on

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கைகள் அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் தெரிவித்திருந்தார்.

சில மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களை அவதானிக்கும்போது, ​​குறிப்பாக சிறுவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஆனந்த விஜேபால கூறியிருந்தார்.

இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இதுபோன்ற பெரும்பாலான நடவடிக்கைகள் கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன, மேலும் SIS மற்றும் இராணுவப் புலனாய்வு இரண்டும் இந்த நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளன.

நாட்டில் மீண்டும் தீவிரவாதமும் இனவெறியும் பரவ அனுமதிக்க மாட்டோம். “இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நாங்கள் பணியாற்றி வருகிறோம்.”

இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அறுகம்பே விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உளவுத்துறை தகவல்களை கையாள்வதில் அரசாங்கம் தொழில்முறையாக செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...