சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்திடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும், ஆனால் அவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் கூறியதன் மூலம் மற்றொரு சர்ச்சைக்கு களம் அமைத்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஞானசார தேரர், அரசாங்க புலனாய்வு சேவைகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் இருந்ததாகக் கூறினார்.
“தாக்குதலுக்கு முன்பே நாங்கள் கார்டினலை அணுகி, அவருடன் நீண்ட நேரம் விவாதித்தோம், சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தோம். இருப்பினும், அவர் எங்கள் எச்சரிக்கைகளைப் புறக்கணித்தார், ”என்று அவர் குற்றம் சாட்டினார்.
“பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் என்ற முறையில், தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்குத் தெரிவிக்க எங்களுக்கு அதிகாரம் இருந்தது, ஆனால் நாட்டின் பாதுகாப்புப் படைகளைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை. “புலனாய்வு சேவைகளால் கூட அணுக முடியாத பல இரகசிய தகவல்களை நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று ஞானசாரா கூறினார்.
“இந்தத் தாக்குதல் குறித்து 2014 முதல் நான் எச்சரித்து வந்தேன். அந்த நேரத்தில் அந்தந்த அரசாங்கத் தலைவர்களுக்கு 17 கடிதங்களை அனுப்பினேன். “நாட்டில் வேறு பல தீவிரவாதக் குழுக்கள் தோன்றுவது குறித்தும் நான் கவலைகளை எழுப்பினேன்,” என்று அவர் கூறினார்.