செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் இன்று மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாதம் தொடங்கிய இந்த நிகழ்வில், ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள் சூரியனின் நேர்க்கோட்டில் இருந்தன. தற்போது அவற்றுடன் இரண்டு கிரகங்களும் இணைந்து 6-ஆக காட்சியளிக்கின்றன. இன்று ஏழாவது கிரகமும் இவற்றின் நேர்க்கோட்டில் இணையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்சியை வெறுங்கண்ணால் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஐந்து கோள்களை மாலை 6:30 முதல் 7:10 வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் தோன்றும்.