மோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்நிறுவனம் இலங்கையில் முதல் முறையாக, இருதய சிகிச்சைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று மாத்திரைகளை அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் புரிந்துள்ளது.
இந்த புதிய உள்நாட்டு மருந்து உற்பத்தி மூலம் நோயாளிகள் மாத்திரைகளுக்கு செலவிடும் தொகையைக் குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் எனினும் எந்தவொரு மருந்தையும் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யப்பட்ட நாட்டில் பயன்படுத்த வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வணிக நோக்கம் மாத்திரமின்றி நோயாளிகளின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.