follow the truth

follow the truth

February, 28, 2025
HomeTOP1முன்னாள் ஜனாதிபதி ரணில் புது டெல்லியில் இன்று விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் புது டெல்லியில் இன்று விசேட உரை

Published on

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர்.

தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும்.

மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக...

ப்ளூமெண்டல் ரயில் கடவை மூடுவது தொடர்பான அறிவிப்பு

புளூமெண்டல் ரயில் கடவை வீதியானது பழுதுபார்ப்பு பணிகளுக்காக நாளை (01) முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஒருகொடவத்தையிலிருந்து...

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 3 சதவீத தள்ளுபடி இரத்து

எரிபொருள் விநியோகஸ்தர்கள் தற்போது பெற்று வரும் 3 சதவீத தள்ளுபடி இரத்து செய்யப்பட்டு, நாளை (01) முதல் அமுலுக்கு...