அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு பிரவேசத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ பிரேன்க் (Marc- Andre Farnche) தலைமையில் அந்த முகவர் நிறுவனம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான கருத்தரங்கு 03 பிரதான அமர்வுகளின் கீழ் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதிநிதிகளின் பரிந்துரைகள் மற்றும் பங்களிப்பை “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்திற்காக பெற்றுக்கொள்வதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.